இந்தியன் 2 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார் பட பிரபல நடிகர்! 

இந்தியன் 2 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார் பட பிரபல நடிகர்! 



பாபி சமக joined in Indian 2

2 . 0 வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனர் சங்கர். இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னையில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளதாகவும், அதனை தொடர்ந்து படக்குழு படப்பிடிப்பிற்காக வெளிநாட்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் கமல் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்தியன் படம் மாபெரும் வெற்றிபெற்றதால் இந்தியன் 2 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

பாபி samga

இப்படத்தில் நயன்தாரா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது ஜிகிர்தண்டா படத்தில் சிறப்பாக வில்லனாக நடித்த பிரபல நடிகர் பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இந்தியன் 2 படம் ரசிகர் மத்தியில் இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.