விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான ஜெயம் ரவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... ட்ரெண்டிங்கில் கலக்கல்.!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான ஜெயம் ரவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... ட்ரெண்டிங்கில் கலக்கல்.!


jeyam-ravi-brother-movie-first-look-released-today

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம் வருகின்ற 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஜெயம் ரவி ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராஜேஷ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், நட்டி, பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Kollywoodகலகலப்பான குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு பிரதர் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இன்று வெளியான பிரதர் திரைப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.