சினிமா

ஒரு பெரியப்பாவா எனக்கு மிகப் பெரிய பெருமை! ஜெயம் ரவி மகனை புகழ்ந்த ஜெயம் ராஜா!

Summary:

Jeyam raja proud of his brother son aaraa

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற சகதோரர்களில் ஒருவர் ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா. இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப்படங்ளை கொடுத்துள்ளனர். ஜெயம், தில்லாலங்கடி, தனி ஒருவன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. ஜெயம் ராஜா தனது தம்பி ரவியை ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

ஜெயம் ரவி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக் டிக் டிக் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் உண்மையான மகன் படத்தில் ஜெயம் ரவிக்கு மகனாக நடித்திருந்தார். அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் முதல் படத்திலே சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் போது ஜெயம் ரவி தன்னை ஆரா பெருமைபடுத்திவிட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது ஜெயம்ரவியின் அண்ணும், பெரியப்பாவுமான மோகன் ராஜ் ஒரு பெரியப்பாவாக எனக்கு இது பெருமை என்றும், ஆரா தன்னை பெருமைப்படுத்திவிட்டதாகவும்  தெரிவித்துள்ளார். 


Advertisement