முதன்முறையாக தனது குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜெனிபர்...வைரலாகும் அழகிய புகைப்படம்.!

முதன்முறையாக தனது குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜெனிபர்...வைரலாகும் அழகிய புகைப்படம்.!


Jenifers introduced her son Photo

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர். இவர் இதற்கு முன்பு ஏராளமான படங்களில் முக்கிய சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜெனிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.அதன் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களும் கூறினார்கள்.


தற்போது முதன் முறையாக தனது குழந்தையுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அப்புகைப்படத்தை ஜெனிபர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.