சினிமா

அடேங்கப்பா.. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், செம மாஸ் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! தெறிக்கவிடும் வீடியோ!!

Summary:

அடேங்கப்பா.. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், செம மாஸ் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! தெறிக்கவிடும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன். அதிரடி திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சாதாரண குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் ஆரம்பத்தில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் 
நந்திதா ஜெனிபர். இவர் பாக்கியலட்சுமியின் தோழியாகவும், அவரது கணவர் கோபிநாத்தின் முன்னாள் காதலியாக, நெருக்கமான கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். மேலும் இவர் வேறு சில தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்ததால் ஜெனிஃபர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் ஜெனிஃபர் தற்போது பார்த்திபன் கனவு திரைப்படத்தில் தான் நடனமாடியிருந்த குத்துப்பாடல் ஒன்றுக்கு கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.


Advertisement