கமலின் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவியின் ரோல் இதுதானா?? அவரே போட்டுடைத்த தகவல்!!

கமலின் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவியின் ரோல் இதுதானா?? அவரே போட்டுடைத்த தகவல்!!



Jaym ravi role in kamal thug life movie

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் மீண்டும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்- மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. ஆக்சன் படமான இதில் கமல் தற்காப்பு கலைத் திறன்களை வெளிப்படுத்துகிறார்.

தக் லைஃப் படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி பகிர்ந்துள்ளார்.

​​​​Jayam ravi

அதில் அவர், மணிரத்னம் சார் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து அழைக்கும் போது நோ சொல்ல முடியாது. படத்தில் தான் கேமியோ ரோலில் நடிக்கிறேன். தான் நடிக்கும் காட்சி தொடர்பான ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என கூறியுள்ளார்.