இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் இந்த ஹுரோ தான் நடிக்கிறாரா.. வெளியான மாஸ் தகவல்.!

இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் இந்த ஹுரோ தான் நடிக்கிறாரா.. வெளியான மாஸ் தகவல்.!


jayamravi-next-act-with-atlee-movie

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதனை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி இன்று பிரபல இயக்குனருள் ஒருவராக இருந்து வருகிறார்.

அட்லீ அடுத்ததாக நடிகர் ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது தமிழில் நடிகர் ஜெயம்ரவியை வைத்து அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ஜெயம்ரவியிடம் ஒரு கதையையும் கூறியுள்ளாராம்.

atlee

ஆனால் ஒரு சிலர் ஜெயம்ரவியை வைத்து படத்தை இயக்கவில்லை,தயாரிக்கத்தான் போகிறார் என்று கூறி வருகின்றனர். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பிறகு தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.