அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? வெளியான அப்டேட்.!
தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். இந்த நிலையில் தனி ஒருவன் 2 திரைப்படம் விரைவில் எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.