சினிமா

இளைய தளபதி விஜயிடமிருந்து இதை கற்று கொண்டேன்! பிரபல நடிகர் நெகிழ்ச்சியாக கூறிய விஷயம்!

Summary:

Jay vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவர்களது படங்கள் ரிலீஸ் என்றாலே தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாட்டமாக தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிகில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதை அடுத்து நடிகர் விஜய் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி ரசிகர்களுக்கு மட்டுமின்றி நடிகை, நடிகர்களுக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தளபதி விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெய். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜயிடமிருந்து நான் இதை கற்று கொண்டுள்ளேன் என நெகிழ்ச்சியாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது பகவதி பட ஷூட்டிங்கின் போது தளபதி விஜயிடமிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு எப்படி வருவது என்பதை பற்றி கற்று கொண்டேன் என ஓபனாக கூறியுள்ளார். 


Advertisement