அடேங்கப்பா... ப்ரீ ரிலீஸ் புக்கிங் இத்தனை கோடியா.? .ரிலீசுக்கு முன்பே பதான் சாதனையை போட்டு தாக்கிய ஜவான்.!

அடேங்கப்பா... ப்ரீ ரிலீஸ் புக்கிங் இத்தனை கோடியா.? .ரிலீசுக்கு முன்பே பதான் சாதனையை போட்டு தாக்கிய ஜவான்.!


jawan-breaks-the-record-of-pathaan-bollywood-excited-to

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில்  நாளை ஜவான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடத்தில் வெளியிடப்பட்டது.

bollywoodமேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்  வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை புரிந்து இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பிரீ புக்கிங் மட்டும் 51.17 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இது ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட 19 கோடி ரூபாய் அதிகமாகும் .

bollywoodஇந்திய அளவில் இந்த திரைப்படம் 32.47 கோடிகளையும்  உலக அளவில் 18.70 கோடிகளையும் ப்ரீ புக்கிங் இன் மூலம் வசூல் செய்திருக்கிறது ஜவான். இதனைக் கண்டு பாலிவுட் திரை உலகமே ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் வெளியாகி எத்தனை கோடி வசூல் செய்யும் என ரசிகர்களும் திரை விமர்சகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.