சென்னையில் ஸ்ரீ தேவிக்கு பிடித்த இடத்தில் உறவினருடன் மகள் செய்த செயல்.! வைரல் போட்டோ.!janvi kapoor latest picture captured on chennai muppathamman temple

ஸ்ரீ தேவி

தனது நடிப்பு திறமையாலும் வசீகரமான அழகாலும் நிறைய ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை பழம் நடிகை ஸ்ரீதேவி. அவருடைய மகள் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடித்து வருகின்றார். 

Janvi kapoor

சேப்பாக்கத்தில் கொண்டாட்டம்

அவரது ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் ஒன்று அடுத்ததாக வெளியாக உள்ளது. எனவே, ஜான்வி கபூர் அது குறித்த தீவிரமான பிரமோஷனில் இறங்கி இருக்கிறார். நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த அவர் சேப்பாக்கத்தில் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னையில் இருக்கும் முப்பாத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: பேரழகு.. யங் ஹீரோயின்கள் ஓரம்போகணும்.. கொள்ளை அழகில் ரசிகர்களை சொக்கவைத்த நடிகை ஸ்ரீ தேவி.!

Janvi kapoor

முப்பாத்தம்மன் கோவில்

தனது உறவினர் ஒருவருடன் அந்த கோவிலுக்கு சென்ற அவர் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, "இந்த கோவில் சென்னையில் எனது தாய் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த இடம்." என்று அதில் தெரிவித்து இருக்கிறார். தனது படம் வெற்றி பெற வேண்டுமென அந்த கோவிலில் அவர் வேண்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அடையாளமே தெரியல.. குழந்தையோடு குழந்தையாக சிம்பு.. வைரல் வீடியோ.!