அஜித்துடன் இணையும் பிரபல நடிகையின் மகள்.! அம்மாவின் இடத்தை பூர்த்தி செய்வாரா?

அஜித்துடன் இணையும் பிரபல நடிகையின் மகள்.! அம்மாவின் இடத்தை பூர்த்தி செய்வாரா?


janvi-kapoor-act-with-ajith-in-next-movie

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Janvi kapoorமேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8 ம் தேதி வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவிருக்கும் அடுத்த அஜித்தின் 60 ஆம் திரைப்படம் குறித்த தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

Janvi kapoor

மேலும் இப்படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாகவும், அப்படத்தில் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.