ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் - வைரலாகும் வீடியோ!

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் - வைரலாகும் வீடியோ!


janvi kapoor -palli dance

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளான ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஸ்ரீதேவி இழப்பிற்கு பிறகு தற்போது தான் ஜான்வி அனைத்தையும் மறந்து உள்ளார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஓன்று. தற்போது ஜான்வி தன்னுடைய டான்ஸ் கிளாசில் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.