விஜய் சார் அப்படி செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.!விழுந்து விழுந்து சிரித்தார்! மனம்திறந்த பிக்பாஸ் ஜனனி!!

விஜய் சார் அப்படி செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.!விழுந்து விழுந்து சிரித்தார்! மனம்திறந்த பிக்பாஸ் ஜனனி!!



janani-talk-about-vijay-in-leo-shooting

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலகளவில் ஹிட்டாகி வசூல் சாதனையும் படைத்து வருகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மடோனா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

மேலும் அவர்களுடன் லியோ படத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்த ஜனனியும் நடித்துள்ளார். அவர் படத்தில் விஜயின் காபி ஷாப்பில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஜனனி படத்தின் சூட்டிங்கில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

janani

அவர் கூறுகையில், படத்தின் சூட்டிங் சமயத்தில்தான் விஜய் சார்  இன்ஸ்டாகிராம் ஓப்பன் செய்தார். அப்போது அவரிடம் என்ன சார் கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவு பாலோவர்ஸ் வந்துவிட்டார்கள் என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறீர்களா என கேட்டார். பின் எனது ஐடியை ஓபன் செய்து பார்த்தார்.

அதில் சிம்பு பாட்டை பாடி வீடியோ வெளியிட்டிருந்தேன். அதை பார்த்ததும் விஜய் சார் பயங்கரமாக சிரித்தார். அவர் அப்படி சிரித்து இதுவரை நாங்கள் யாருமே பார்த்ததில்லை. விஜய் சார் என் ஐடியை ஓபன் செய்து வீடியோவை பார்ப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை என்று ஜனனி கூறியுள்ளார்.