BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வெளிநாட்டில் சாதனை படைத்த ஜெயிலர்.. எத்தனை கோடி தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இதில் மலேசியாவில் ஜெயிலர் திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது அந்த நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி மலேசியாவில் இதற்கு முன்பு வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலையும் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் தில்வாலே என்ற திரைப்படம் தான் மலேசியாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.