வெறித்தனம்.. வேற லெவலில் உருவாகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.! மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு!!

வெறித்தனம்.. வேற லெவலில் உருவாகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.! மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு!!



Jailer movie making video viral

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி உட்பட பலரும்  நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் ரீமேக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வைரலாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களுக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.