ஜெயிலர் புகழ் சிவ ராஜ்குமார் உடன் இணையும் துல்கர்... அதர்வா வெற்றிப்பட இயக்குனர் போட்ட மாஸ் ஸ்கெட்ச்.! விரைவில் அறிவிப்பு.!

ஜெயிலர் புகழ் சிவ ராஜ்குமார் உடன் இணையும் துல்கர்... அதர்வா வெற்றிப்பட இயக்குனர் போட்ட மாஸ் ஸ்கெட்ச்.! விரைவில் அறிவிப்பு.!


jailer-fame-kannada-star-sivaraj-kumar-going-to-join-wi

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த கதாபாத்திரம் மற்றும் இவரது ஸ்டைல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

கன்னட சினிமாவை தவிர வேறு மொழி படங்களில் நடிக்காத இவர் ஜெயிலர் திரைப்படத்தில் தான் முதல் முதலாக தமிழில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

tamil cinemaஅதர்வா நடித்த ஈட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ரவி அரசு. இவர் இயக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் சிவ ராஜ்குமார் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamil cinemaமேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.