BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
முதன்முறையாக சைக்கோ வில்லனான ஜெய்! அட.. ஹீரோ யார்னு தெரியுமா? வெளிவந்த மிரட்டலான தகவல்!!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், திரைப்பட நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி. அவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இப்படத்தை பத்ரி எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை அவனி டெலி மீடியா சார்பாக நடிகை குஷ்பூ சுந்தர் தயாரிக்கிறார்.
1980களில் நடக்கும் சைக்கோ த்ரில்லர் கதை அம்சத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் முதன்முறையாக ஜெய் வில்லனாக நடித்துள்ளார். மேலும்
ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு நவநீத் சுந்தர் இசையமைக்கிறார்.

பட்டாம்பூச்சி படத்தில் ஜெய் கொடூர சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். படம் மே மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் மிகவும் விறுவிறுப்பாகவும், படத்தின் இறுதிவரை செம த்ரில்லராகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெய்யை கொடூர வில்லனாக காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.