சினிமா

என்னது! நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறதா? தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்!

Summary:

Jagame thandiram movie not released in OTT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்குநாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திரையரங்குகள் மூடப்பட்டு படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ள சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவருகின்றன. மேலும் சூரரைப் போற்று திரைப்படமும் அக்டோபர் 30 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்  வெளிவரவுள்ளதாக நடிகர் சூர்யா சமீபத்தில் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து பல படங்கள் 
 ஓடிடியில் வெளிவரவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அவற்றில் சிலவற்றிற்கு தயாரிப்பாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் படம்  ஓடிடி தளத்தில் வெளியாகிறது என தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து படத்தின் தயாரிப்பாளர்  சஷிகாந்த்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜகம் இன்னும் சிகிச்சையில்தான் உள்ளது. சாதாரண நிலைக்கு வரவில்லை. தியேட்டர்கள் திறக்கும் வரை பொறுமையாக இருங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம். மொத்த படகுழுவும் தனுஷின் ரகிட ரகிடவை பெரிய திரையில் பார்க்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement