நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு.!!

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு.!!


it-raid-in-tapsee-home

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர்கள் மது மான்டேனா, விகாஸ் பால் ஆகியோர் வீடுகளில் காலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். மும்பை மற்றும் புனே நகர்களில் உள்ள 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையின் முடிவில் ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு காரணமாக இந்தத் திடீர் ரெய்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

IT Raid

நடிகை டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் ஆளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், டாப்ஸி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.