லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான தகவல்.!

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான தகவல்.!



Ishwarya Rajinikanth in lal salam movie audio launch

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. மேலும் ரஜினியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுருந்தது.

Lal salam

இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் மாத இறுதியில் நடத்த வடக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 25 அல்லது 26 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.