மீண்டும் துணிச்சலான படுக்கையறை காட்சியில் ஹரிஸ் கல்யாண்! பட்டைய கிளப்பும் ட்ரெய்லர்

மீண்டும் துணிச்சலான படுக்கையறை காட்சியில் ஹரிஸ் கல்யாண்! பட்டைய கிளப்பும் ட்ரெய்லர்


ishpade-rajavum-idhaya-raniyum-trailer

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஸ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் பியார் பிரேமா காதல். எலன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஹரிஸ் மற்றும் ரைசா துணிச்சலாக பல படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தனர். 

harish kalyan

இப்போதும் மீண்டும் அதே போன்று படுக்கையறை காட்சிகளில் நடிகர் ஹரிஸ் கல்யாண், நடிகை ஷில்பா மஞ்சுநாத்துடன் தனது அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்திலும் நடித்துள்ளனர். 

'புரியாத புதிர்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்திருக்கும் படம், 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்'. இப்படத்தை மாதவ் மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

harish kalyan

இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மா.கா.பா ஆனந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெயிலரை விஜய் சேதுபதி, இயக்குநர்கள் ராம், கெளதம் மேனன், சீனு ராமசாமி, புஷ்கர் - காயத்ரி, கிருத்திகா உதயநிதி, வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.