பிரபல கிரிக்கெட் வீரரை 2வது திருமணம் செய்து கொண்டாரா வி.ஜே ரம்யா..? வைரலாகும் புகைப்படம்..!

பிரபல கிரிக்கெட் வீரரை 2வது திருமணம் செய்து கொண்டாரா வி.ஜே ரம்யா..? வைரலாகும் புகைப்படம்..!


Is VJ Ramya married for the second time to a famous cricketer..? Viral photo..!

பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் வி.ஜே ரம்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கலக்க போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார்.

அது மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வனமகன், மாஸ்டர், கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு காட்டினார்.

vj ramya

இந்நிலையில் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அபரஜித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான ஒரு ஆண்டிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின் ரம்யா நடிப்பு, மாடலிங், பிட்னஸ் என்று தன்னை பிஸியாக வைத்துக் கொண்டார்.

தற்போது ரம்யாவை குறித்த ஒரு புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத் தீ போல் பரவி வந்தது. அந்த புகைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் ரம்யா ஜோடியாக நின்றபடி போஸ் கொடுத்திருப்பார். இந்த புகைப்படத்தை ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டு தினேஷ் கார்த்திக் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பதாக கேப்ஷன் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட வதந்தியை உண்மை என நினைத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் உண்மையில் தினேஷ் கார்த்திக்கிற்கு திருமணமாகி தீபிகா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மேலும் வி.ஜே ரம்யா அவரது இரண்டாவது மனைவி என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய் என்று சொல்லப்படுகிறது.