என்னது நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு சம்பளமா..?

என்னது நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு சம்பளமா..?


is-my-actor-arjun-getting-paid-this-much-for-his-role-a

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சத்திர நடிகராகவும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தில் வில்லனாக நடித்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு அர்ஜுனை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அர்ஜுன் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

tamil cinema

மேலும் இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மற்றும் அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரின் நடிப்பையும் திரையில் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.