சூர்யாவுடன் நடிக்க மறுப்பு தெரிவித்தாரா சாக்லேட் பாய்.? விபரங்கள் இதோ.!

சூர்யாவுடன் நடிக்க மறுப்பு தெரிவித்தாரா சாக்லேட் பாய்.? விபரங்கள் இதோ.!



is-madhavan-hesitate-to-act-with-surya-details-here

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவார் என்ற வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சூரரைப் போற்று புகழ் இயக்குனரான சுதா கொங்காராவுடன் இணைகிறார் சூர்யா. இந்தக் கூட்டணியின் முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த புதிய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Kollywoodமேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்க மற்றொரு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை கேட்டுக் கொண்டதாகவும் அதன் கதாபாத்திரம் அவ்வளவு வலிமையாக வடிவமைக்கப்படாததால்  அவர் நடிப்பாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

Kollywoodஅந்த நடிகர் வேறு யாருமில்லை சுதா கொங்கராவின் இறுதி சுற்று திரைப்படத்தில் நடித்த மாதவன் தான். மேலும் மும்பையில் சூர்யாவிற்கு நல்ல கம்பெனியாகவும் இருந்து வருகிறார் மாதவன். இதனால் அவர் நிச்சயமாக இந்த புதிய திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆவார் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.