புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அடிக்கடி சூட்டிங் கேன்சல் செய்யும் தனுஷ்... என்னதான் நடக்கிறது.? ... ஷாக்கிங் ரிப்போர்ட்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் மட்டுமல்லாது ஹிந்தி, ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையால் கலக்கி வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை தனுசு இயக்கி நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு இசை புயல் ஏஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷை பற்றி வெளியாகி இருக்கும் ஒரு செய்தி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எப்போதும் ஸ்பாட்டிற்கு வந்தால் நடிப்பு மட்டும் என்று இருக்கும் தனுஷ் தற்போது அடிக்கடி சூட்டிங் கேன்சல் செய்வதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அவரது மனைவி ஐஸ்வர்யாவின் பிரிவுதான் காரணம் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிந்தனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தனது மனைவியை பிரிந்த ஆரம்ப கட்டங்களில் தனுஷ் தைரியமாக இருந்தாலும் தற்போது மனைவியின் பிரிவு பிரிவு தனுசை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.