தன்னை நம்பியவர்களை ஏமாற்றுகிறாரா அஜித்.? அவரது புதிய திட்டம்.?

தன்னை நம்பியவர்களை ஏமாற்றுகிறாரா அஜித்.? அவரது புதிய திட்டம்.?is-ajith-going-to-quit-acting-career

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித் குமார். இவரது 62 ஆவது திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். வருகின்ற ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து  திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம்  வெளியாக இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் பைக் ரேஸரான அஜித் தனது லட்சியத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Ajithkumar

தற்போது உலக சுற்றுப்பயணம் பைக்கிலேயே மேற்கொண்டு வரும் அவர் அது தொடர்பாக  நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் பைக்கில் உலக சுற்றுலா சென்று வருபவர்களுக்கு உதவும் வகையில் அந்த நிறுவனம் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் பல காலமாகவே தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்றும் தன்னை தலை என்று அழைக்க வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Ajithkumar

இதனால் அஜித் விரைவிலேயே சினிமாவிலிருந்து விலகி விடுவாரோ என்ற அச்சமும் அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தான் அஜித்தின் கனவும் லட்சியமாக இருந்திருக்கிறது. அதனை நோக்கி தற்போது ஒவ்வொரு நகர்வுகளாக மேற்கொண்டு வருகிறார் அஜித். இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுப்பதாக இருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.