ஏதோ அவசரப்பட்டு அப்படி செஞ்சுட்டேன்! மன்னிச்சுடுங்க! வருத்தத்தில் இரண்டாம் குத்து இயக்குனர்! எதனால் தெரியுமா?

ஏதோ அவசரப்பட்டு அப்படி செஞ்சுட்டேன்! மன்னிச்சுடுங்க! வருத்தத்தில் இரண்டாம் குத்து இயக்குனர்! எதனால் தெரியுமா?


irantham-kuthu-movie-director-abologise-to-bharathi-raj

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. இப்படம்  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாகும். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது.  பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். 

மேலும் இதனை கண்ட இயக்குனர் பாரதிராஜா, இரண்டாம் குத்து  படத்தின் விளம்பரத்தை பார்க்கவே கூசினேன். எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?  இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். உடனே இதற்கு இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், டிக் டிக் டிக் படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு இப்போது கூசிருச்சோ?  என  புகைப்படத்துடன் பதிலளித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாம் குத்து  படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீசருக்கு இயக்குனர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில் எனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு டுவிட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் செய்தது. 

நான் போட்ட டுவிட்டர் பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அவரது அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றியிருக்க கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என கூறியுள்ளார்.