தனுஷின் கர்ணன் படத்தை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா! அடேங்கப்பா.. வேற லெவல்தான்!!

தனுஷின் கர்ணன் படத்தை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா! அடேங்கப்பா.. வேற லெவல்தான்!!


ips-officer-tweet-about-karnan-movie

தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக திகழ்ந்துவரும் தனுஷ் 
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பெருமளவில் பிரபலமான
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கர்ணன்.  இந்த படத்தில் அவருடன் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 மேலும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.  இந்நிலையில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஏராளமான பிரபலங்களும் இப்படம் குறித்து நல்ல விமர்சனங்களை அளித்து பாராட்டி வருகின்றனர். கர்ணன் படம் 3 நாட்களில் 21 கோடி வரை வசூல் சாதனையும் படைத்துள்ளது.

இந்நிலையில் கர்ணன் படத்தை பார்த்த திருப்பத்தூர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், கர்ணன் நியாயமற்ற அநீதிக்கு எதிராக எழுகிறான். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்திவாய்ந்த படம். கர்ணன் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த படம் என குறிப்பிட்டுள்ளார்.