உலகம் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ள சூப்பர் ஹிட் தமிழ் சினிமா; படக்குழுவினர் மகிழ்ச்சி.!

Summary:

international cinima festiwel

கோவாவில் நடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு பரியேறும் பெருமாள் தேர்வாகியுள்ளதால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்கள் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பறை பெற்ற படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து இருந்தார்.

தென்தமிழகத்தின் நிகழும் சாதியக் கொடுமைகளை பற்றி பேசுவதாக அமைந்த இப்படம் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கூடுதலான திரையரங்குகளில் பிறகு திரையிடப்பட்டு விமர்சன ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் லாபம் ஈட்டிக் கொடுத்தது.

Image result for pariyerum perumal

இந்த நிலையில் கோவாவில் நடைபெறும் 49 வது சர்வதேச திரைப்பட திருவிழாவிற்கு போட்டியிட்ட 190 படங்களில் தேர்வான 22 படங்களில் ஒன்று பரியேறும் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ள தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த நிலையில் தேர்வாகியுள்ள இப்படத்தின் படக்குழுவினருக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


 


Advertisement