BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இப்படியெல்லாம் கூட நடக்குமா? விளையாடிகொண்டிருந்த போதே உயிரிழந்த இன்ஸ்பெக்டர்! நெஞ்சடைக்க வைக்கும் வீடியோ!!
விளையாடிக் கொண்டிருந்தபோதே இன்ஸ்பெக்டர் ஒருவர் மாரடைப்பால் கண்ணிமைக்கும் நொடியில் உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கணபாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் பகவான் பிரசாத். பேட்மிண்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் தினமும் தனது நண்பர்களுடன் அரங்கில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் பேட்மிண்டன் விளையாடிவிட்டுதான் அவர் தினமும் காலை பணிக்கு செல்வாராம்.
இவ்வாறு நேற்றும் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர் மூச்சு வாங்குவது போல சில நிமிடம் அசையாமல் நின்றநிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு பதறிப்போன அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பேட்மிட்டன் விளையாடிய இறுதி நிமிட வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை நெஞ்சடைக்க வைத்துள்ளது.