சினிமா

என்னை கல்யாணம் பண்ணிக்கோ!! பிகில் நடிகையிடம் வெளிப்படையாக கேட்ட பிரபலம்! அதற்கு அவரது பதிலை பார்த்தீர்களா!!

Summary:

induja post cute photo

 தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வைபவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.

மேலும் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இந்துஜாவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. மேலும் அவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆர்யாவுடன் இவர் நடித்த மஹா முனி திரைப்படத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகினர்.மேலும் அவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த  பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் எப்பொழுதுமே ஹோம்லியாக ரசிகர்களை கவர்ந்து வந்த இந்துஜா சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது மிகவும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நடிகை மஹிமா நம்பியார் என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டுள்ளார். அதற்கு இந்துஜா வாங்க காதல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

View this post on Instagram

Costumes by @labelswarupa Clicks by @pk_views

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on


Advertisement