இந்தியன் 2வில் கமலின் கெட்டப்பை ரகசியமாக வைத்திருந்த சங்கர்! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான இயக்குனர்!

இந்தியன் 2வில் கமலின் கெட்டப்பை ரகசியமாக வைத்திருந்த சங்கர்! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான இயக்குனர்!


Indian2 kamal sankar

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது கமல் முழு மூச்சாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Indiyan2

மேலும் இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் கெட்டப்பை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார் சங்கர். ஆனால் யாரோ ஒருவர் அவரின் கெட்டப்பை தற்போது புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் இயக்குனர் சங்கர் மிகுந்த சோகத்தில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.