சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் மேடையில் மகிழ்ச்சியான செய்தியை கூறிய கமல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

Indian 2 movie latest update

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் நான்கு பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 12 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர். இதில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் அந்த 5 வது நபர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்க வந்த கமல் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளார். ஆதாவது, சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக கடந்த சீசனில் பிக்பாஸ் மேடையில் கமல் கூறியிருந்தார்.

அதன்படி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்துவந்த நிலையில் ஒருசில பிரச்னைகளாலால் படம் என்ன ஆனது என எதுவம் தெரியமால் இருந்தது. இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகவும், அதனாலயே தனது மீசையை எடுத்துவிட்டதாகவும் கமல் கூறியுள்ளார்.


Advertisement