தல, தளபதியை மிஞ்சிய சூர்யா; ரசிகர்கள் செம உற்சாகம்.!

தல, தளபதியை மிஞ்சிய சூர்யா; ரசிகர்கள் செம உற்சாகம்.!



india largest cutout - ngk movie - surya fans

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

அரசியலை மையமாக கொண்ட இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் என்.ஜி.கே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் வளியாகின. அதில் சூர்யா புகைப்படத்துடன் கூடிய பேனர்களில் காக்கும் முன்னேற்ற கழகம் (KMK ) என்ற கட்சியின் பெயர் இடம்பெற்றதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.



 

இந்நிலையில் NGK படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது என ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதால் சூர்யா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வந்தனர். மேலும் சூா்யா ரசிகா்கள், இதுவரை யாருக்கும் வைக்காத உயரத்திற்கு கட் அவுட் வைக்க ரசிகா்கள் திட்டமிட்டனா். அதன்படி திருவள்ளூா் மாவட்டடத்தில் சூா்யாவுக்கு 215 அடியில் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு, சர்க்கார் படத்திற்காக தளபதி விஜய்க்கு 175 அடி உயரத்திலும் விஸ்வாசம் படத்திற்காக தல அஜித்திற்கு 190 அடியில் கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை முறியடிக்கும் வகையில் சூா்யா ரசிகா்கள் 215 அடியில் கட்அவுட் வைத்துள்ளனா்.