சினிமா வீடியோ

வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸ் குத்தாட்டம் போட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்! இந்த வீடியோவை பார்த்தீர்களா!!

Summary:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி பொங்கலை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்களி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி பொங்கலை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. சிறுவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளான திவ்யா, வனிதா, ஆகான்ஷா கோலி, மம்தா மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மிகவும் ஹேப்பியாக வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


Advertisement