உன்னை இழந்து வாடுகிறேன்.! மகளைப் பற்றி வலைதளத்தில் பதிவிட்ட பின்னணி பாடகி சித்ரா.!

உன்னை இழந்து வாடுகிறேன்.! மகளைப் பற்றி வலைதளத்தில் பதிவிட்ட பின்னணி பாடகி சித்ரா.!



imissyouchitratheplaybacksingerpostedaboutherdaughteron

திரைப்பட பின்னணி பாடகி சித்ரா மறைந்த தன்னுடைய மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு உருக்கமான பதிவை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காளி, ஒரியா, ஹிந்தி, குஜராத்தி பஞ்சாபி என்று பல மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை பாடியிருக்கிறார் பாடகி சித்ரா.

chitra

மேலும் பாடகி சித்ரா 6 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், 6 முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளதோடு, பல மாநில விருதுகளையும் வாங்கியிருக்கிறார். சித்ரா மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்தவர் என்றாலும், அவருக்கு மிகப்பெரிய புகழை வாங்கி கொடுத்தது தமிழ் இசையுலகம் தான். இந்தியாவில் மிக அதிக முறை தேசிய விருதுகளை வாங்கிய பாடகி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தேசிய அளவில் சினிமாவில் இன்றளவும் தன்னுடைய வெற்றி பயணத்தை பாடகி சித்ரா தொடர்ந்து வருகிறார்.

அவர், கடந்த 1988-ஆம் வருடம் விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பல வருடங்கள் சென்ற பின்னர் கடந்த 2002 ஆம் வருடம் நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. மேலும் அந்த குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. சித்ரா எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவருடன் தன்னுடைய மகளை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில், கடந்த 2011-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியொன்றில் பாடுவதற்காக துபாய் சென்றபோது, தன்னுடைய மகளை உடன் அழைத்துச் சென்றிருந்தார் பாடகி சித்ரா. அங்கே எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்து குழந்தை நந்தனா உயிரிழந்தார்.

chitra

தன்னுடைய குழந்தையை இழந்த வருத்தத்திற்கு நடுவே, பாடகி சித்ரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தான் பாடகி சித்ரா உயிரிழந்த தன்னுடைய மகளை நினைத்து ஒரு உருக்கமான பதிவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில்,நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு இசையலகத்தையும், திரையுலகத்தையும் சார்ந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாடகி சித்ராவுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.