வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
இயக்குனரை கால்கடுக்க மரத்தடியில் நிற்கவைத்த இளையராஜா.. அதுக்காக இப்படியா?.. இது கொஞ்சம் ஓவர்தான்..!!
இந்திய திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம்வரும் மணிரத்தினம் பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தை முதல் இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் உணரு படத்தையும், தமிழில் பகல் நிலவையும் இயக்கினார்.
அதன் பின்னர் மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். ரோஜா திரைப்படத்திற்குப் பின்னர் இவர் இந்திய அளவில் பிரபலமான நிலையில், ஏ.ஆர்.ரகுமானும் இசையமைப்பாளராக அந்த படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் திரைப்படத்தில் இருந்து தளபதி வரை இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வந்த மணிரத்தினம், அதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுடன் கைகோர்த்து தனது திரைப்பணியை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் செய்யாறு பாலு, மணிரத்தினம் மற்றும் இளையராஜா இடையேயான நட்பு முறிந்தது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், "பாலச்சந்திரன் தயாரிக்கும் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்குவதாக இருந்தபோது இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு மணிரத்தினம் சென்றுள்ளார். அங்கே இளையராஜாவுக்கும், மணிரத்தினத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மணிரத்தினத்தை ஸ்டூடியோ வெளியே மரத்தடியில் இளையராஜா நிற்க வைத்துவிட்டார். இந்த தகவலானது பாலச்சந்தருக்கு தெரிய வந்தபோது, ஸ்டுடியோவிற்கு வந்து மணிரத்தினத்தை காரில் ஏற்றி சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் புதிய இசையமைப்பாளர் ஒருவரை அறிமுகம் செய்யலாம் என முடிவெடுத்து இளையராஜாவிடம் பணியாற்றிய ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்து பாலச்சந்தர், ரோஜா படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்" என்று கூறினார்.