இளையராஜா மகளின் கடைசி ஆசை இதுதானா.! மகளுக்காக இளையராஜா செய்த செயல்.!?Ilayaraja daughter pavatharani last wish

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் தமிழில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து பாடியுள்ளார். இளையராஜா இசைக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்று வரை இருந்து வருகிறது. இளையராஜாவை பற்றி பல சர்ச்சைகள் கிளம்பினாலும் அவரின் ரசிகர்கள் இன்று வரை பாராட்டி வருகின்றனர்.

Ilayaraja

இது போன்ற நிலையில் இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 25 ஆம் தேதி அன்று இலங்கையில் உயிரிழந்தார். இந்த செய்தி திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பவதாரணியின் உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து தேனியில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரணிக்கு தான் உயிரிழக்க போகிறேன் என்று ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும் என்பதால் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார் என்று இயக்குனர் வெங்கட் பிரபு, பவதாரணி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டிருந்தார்.

Ilayaraja

மேலும் பவதாரணியின் கடைசி ஆசை உயிர் இழக்க முன் தன் அப்பா இளையராஜாவுடன் இருக்க வேண்டும் என்பதுதான். இதையறிந்த இளையராஜாவும் தன் மகள் உயிரழக்க போவதற்கு கடைசி இரண்டு மணி நேரமும் அவருடனே என்று கூறப்பட்டு வருகிறது.