கல்லூரி மாணவிகளின் வினோத ஆசைக்காக, இசைஞானி இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?

கல்லூரி மாணவிகளின் வினோத ஆசைக்காக, இசைஞானி இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?



ilaiyaraja introduced 9 college students as singer in movie

தமிழகத்தில் பல கல்லூரிகளில்இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும் அந்த விழாக்களில்  இளையராஜா கலந்துகொண்டு, மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்பு பேசியும், பாட்டு பாடியும் மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும் சில மாணவிகளும் இளையராஜாவின் பல பாடல்களைப் பாடி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.  

அப்பொழுது சென்னையிலுள்ள ராணி மேரி கல்லூரி மற்றும் எத்திராஜ் கல்லூரி மாணவிகள், ‘இளையராஜாவின் இசையில் தாங்கள் சினிமாவில் பாட விரும்புவதாகவும், அதுவே தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இளையராஜா, தன்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சில மாணவிகளை வரவழைத்துக் குரல் தேர்வு நடத்தினார்.

Ilayaraja

அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை இளையராஜா தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார். 

அதனை தொடர்ந்து , எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி தயாரிப்பில் , பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற  படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.