எனக்கு அது வேண்டும்! ஹரிஷ் கல்யாணிடம் கூச்சமே இல்லாமல் கேட்ட பிக் பாஸ் ரைசா!

எனக்கு அது வேண்டும்! ஹரிஷ் கல்யாணிடம் கூச்சமே இல்லாமல் கேட்ட பிக் பாஸ் ரைசா!


i-want-boy-friend-actress-riza-asked-harsih-kalyan

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இதன் முதல் கட்டமாக தனது சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.

இந்நிலையில் சன் டீவியில் ஒளிபரப்பாகும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாணுடன் பங்கேற்கிறார். நிகழ்ச்சியை பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு இடையில் ரைசா பற்றி கூறிய ஹரிஷ் கல்யாண் எனக்கு பாய் பிராண்ட் வேணும், உனக்கு கேர்ள் ப்ரண்ட்ஸ் யாராவது இருக்காங்களான்னு கூச்சமே இல்லாமல் கேட்டதாக ஹரிஷ் கல்யாண் கூறினார்.