"நான் கிழவியா.. அஜித்தை விட 5 வயது இளையவள் நான்" தல ரசிகருக்கு கஸ்தூரி அதிரடி பதில்!

"நான் கிழவியா.. அஜித்தை விட 5 வயது இளையவள் நான்" தல ரசிகருக்கு கஸ்தூரி அதிரடி பதில்!


I am not a old lady, actress kasduri told in his twitter account

நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைத்தளத்தில் எதாவது சர்ச்சையை ஏற்ப்படுத்தி கொண்டு ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருபவர். சமீபத்தில் கூட வனிதா விஷயத்தில் தலையிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதே சமயம் தன்னை யாராவது மோசமாக விமர்த்தாலும் அதற்கு தக்க பதிலடியை கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி நடித்த பழைய படத்தின் பாடலை வெளியிட்டு இது நம்ம கஸ்தூரி கிழவி தானே. அந்த காலத்தில் சரியான ஃபிகரா இருந்திருப்பா போல என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை கஸ்தூரி ரீட்விட் ஒன்றை கூறியுள்ளார்.


அதில் எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? Ajith sir கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னனா கஸ்தூரி கிழவிக்கு அஜித் சாரை விட அஞ்சு வயசு கம்மி தான். ஹையோ ஹையோ என பதிவிட்டுள்ளார்.

மேலும் நான் தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், இந்த வாய்ப்பை பயன்படுத்தி Mr அஜித் குமாரின் புகழை கெடுக்க வேண்டாம். அவர் ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன், அவரை நான் அதிகம் அட்மையர் செய்கிறேன். அவரது ரசிகராக இருக்க பெருமை படும் ரசிகர்கள், அவர் உங்களை நினைத்து பெருமை படும் படி செய்யுங்கள். இது போன்ற சீப்பான விஷயங்களை செய்யாதீர்கள்  என கஸ்தூரி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.