சினிமா

அட.. ஹிப்ஹாப் ஆதியையும் விட்டுவைக்கலையா! கைவரிசையை காட்டிய ஹேக்கர்ஸ்! ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி

தமிழ் சினிமாவில் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் என தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் ஹிப்ஹாப் ஆதி. அதனைத் தொடர்ந்து அவர் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆதி நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் அனைத்தும் இளம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் தற்போது ஹிப்ஹாப் ஆதி சிவக்குமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

 மேலும் ஹிப்ஹாப் ஆதி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது சேனலை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதில் ஹிப்ஹாப் ஆதி தனது பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளனர். யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 


Advertisement