சீரியஸான இந்த நேரத்தில் இப்படியா பேசுவது! பிரபல நடிகையை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சீரியஸான இந்த நேரத்தில் இப்படியா பேசுவது! பிரபல நடிகையை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!


hip-hop-aadhi-tweet-about-coronovirus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. உயிரை குடிக்கக்கூடிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90000க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் இந்தியாவில்  29 பேர் பாதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.  அதனால் இந்திய மக்கள் முழுவதும் பெரும் பீதியில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சார்மி கொரோனா குறித்து கிண்டல் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டிருந்தார்.

Coronovirus

 இந்நிலையில் மீசையமுறுக்கு, நட்பேதுணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான மாபெரும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து மிகவும் கிண்டலாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில் காற்று வீசும் பகுதிகளில் நீங்கள் தூசிக்காக முகமூடி அணிந்து இருந்தால் கூட உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அனைவரும் நினைத்துவிடுவர். இங்கு கொரோனா வர  வாய்ப்பேயில்லை. ஏனெனில் நாங்கள் நிலவேம்பு வைத்துள்ளோம் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சீரியசான விஷயத்தில் இவ்வாறு விளையாட்டாக கருத்தை பகிராதீர்கள் என பலரும் கூறி வருகின்றனர்.