தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகர்! நடந்தது என்ன? பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகர்! நடந்தது என்ன? பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!


hindi-serial-actor-sameer-sharma-commits-suicide

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,  படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏராளமான நிபந்தனைகளுடன் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் திரைப்பிரபலங்கள் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

2009 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் ஹஸீ தோ பஸீ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் சமீர் ஷர்மா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்துவந்த அவர் சமீபத்தில் சமையலறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

suicide

இந்த நிலையில் அதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாட்ச்மேன் இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம்  தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சமீர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் சமீரின் நண்பர்கள் அவருக்கு எந்த மனஅழுத்தமும் கிடையாது, மேலும் சுஷாந்த் சிங் மரணத்தின் போதுகூட, தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என சமீர் கூறினார் என்றுள்ளனர். இந்த நிலையில் சமீர் தற்கொலைதான் செய்துகொண்டாரா?  அல்லது வேறு ஏதும் நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்வதாக போலீசார்கள் கூறியுள்ளனர்.மேலும் அவரது மரணத்திற்கு நண்பர்கள், சக நடிகர் நடிகைகள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.