ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விதியா? தலை சுற்றிப்போன தமிழ் ரசிகர்கள்.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விதியா? தலை சுற்றிப்போன தமிழ் ரசிகர்கள்.

கடந்த 105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த வாரம் முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் மூன்று பட்டத்தை கைப்பற்றி 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், தமிழில் பிக்பாஸ் ஒளிபரப்பாவது போல ஹிந்தியிலும் பிக்பாஸ் ஒளிபரப்பாகிவருகிறது. 12 சீசன்களை கடந்து தற்போது 13 வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக புதிய சட்டம் ஓன்று போடப்பட்டுள்ளது.
அதில் ஆண்கள் மாற்று பெண் போட்டியாளர்கள் Bed Friend Forever என்ற பெயரில் பெட்டை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே படுக்கையில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த விதி.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்க, அனைத்து வயதினரும் டிவி பார்க்கும் நேரத்தில் இப்படி செய்வது சரியா என கேள்விகள் எழுந்துள்ளது.