சினிமா பிக்பாஸ்

இந்தி பிக்பாஸின் முதல் டாஸ்கே வேற லெவல்! தமிழிலும் இப்படி ஒரு டாஸ்க் வேண்டும் என கிண்டல் செய்யும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ.

Summary:

Hindi big boss season 13 video

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி முதன் முதலில் அறிமுகமானது இந்தியில் தான். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பரவியது. இதுவரை இந்தியில் 12 சீசன்கள் முடிவடைந்து உள்ளன.

தற்போது சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 13 துவங்கியது. இதனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் சற்று மாறுதலாக நாய் ஒன்று வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸின் முதல் டாஸ்காக வேற லெவல் டாஸ்க்கை கொடுத்துள்ளனர்.

அதாவது கீழே இருக்கும் ஒரு சில பொருட்களை வாய் வழியாகவே மற்றவரிடம் பாஸ் செய்து மறுமுனையில் சேர்க்க வேண்டும். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் தமிழிலும் இது போன்ற டாஸ்க் இருந்தால் நல்ல இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement