சினிமா

கதைக்காக நான் எதையும் செய்ய தயார்...! டாப்ஷீ ஓபன் டாக்...!

Summary:

heroin-tapsee-acting-for-anything

கதைக்காக நான் எதையும் செய்ய தயார்...! டாப்ஷீ ஓபன் டாக்...! 

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் டாப்ஸி. இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை போல் இல்லாமல் எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். மேலும் எனக்கு வீணாக மேக்கப் போடுவது அதற்கு நேரத்தை ஒதுக்குவது என்பது பிடிக்கவே பிடிக்காது. ஆனால் ஆடை அணிவதில் மட்டும் அக்கறை காட்டுவேன். 

எப்போதாவது சோர்வாக இருந்தால் ஷாப்பிங் செல்வேன். அது எனக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய தயாராக உள்ளேன்.

துப்பாக்கி சுடும் வீரர்கள் பற்றி அனுராக் காஷ்யப் எடுக்கும் உண்மை கதையில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்தும் கொண்ட படம். அந்த படத்துக்காக துப்பாக்கி சுட பயிற்சி எடுத்து வருகிறேன். ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதற்கு நூறு சதவீதம் உழைக்க வேண்டும். நடிப்பு இயற்கையாக வர வேண்டும். எந்த ஒரு காரணத்துக்காவும் டூப் நடிகையை வைத்து காட்சிகளை படமாக்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எல்லா காட்சிகளிலும் நானே நடிக்கிறேன். கதாபாத்திரமாக மாறி நடித்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்று அவர் தெரிவித்தார்...


Advertisement