சிறுவயதில் பாலியல் தொல்லை.. என்னை நிர்வாணமாக்கி., பிரபல நடிகை பகீர் பேட்டி.! ஆடிப்போன ரசிகர்கள்..!

சிறுவயதில் பாலியல் தொல்லை.. என்னை நிர்வாணமாக்கி., பிரபல நடிகை பகீர் பேட்டி.! ஆடிப்போன ரசிகர்கள்..!


heroin-kangana-ranaut-explain-her-childhood-harassment

தனக்கு சிறுவயதிலேயே பாலியல் சீண்டல்கள் நடந்தது என நடிகை கங்கனா ரனாவத் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரனாவத், 'லாக்கப்' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் 16 போட்டியாளர்களுடன் 72 நாட்கள் நடத்தப்பட்டுவரும் நிகழ்ச்சியில் அனைவரும் ஜெயில் போன்ற ஒரு செட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகை கங்கனாவிடம் போட்டியாளர்கள் பல அந்தரங்க விசயங்களை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். அதுபோல முனாவர் என்ற போட்டியாளர் தான் சிறுவயதில் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் "தனது 6 வயது முதல் 14 வயது வரை உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகவும், இந்த விஷயம் தொடர்பாக எனது பெற்றோரிடம் கூட எதுவும் கூறியதில்லை" என தெரிவித்துள்ளார்.

India

இதைக்கேட்ட நடிகை கங்கனா ரனாவத், தானும் சிறுவயதில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறுகையில், "சிறுவயதில் நான் வசித்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர், என்னை அடிக்கடி தகாத முறையில் கண்ட இடங்களில் தொடுவார்.

சில சமயங்களில் என்னை தனியாக அழைத்து வந்து உடைகளை கழட்டுமாறு கூறி டார்ச்சர் செய்வார். ஆனால், அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. ஒவ்வொரு வருடமும் ஏராளமான குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இது குறித்து யாரும் வெளியில் பேசுவதில்லை.

இதனை இப்படியே விட்டால் குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிபோய்விடும். எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்' குறித்து பெற்றோர்கள் கற்பிப்பது மிகவும் அவசியம். இதன் மூலமாக சமூகத்தில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தடுக்க முடியும்" என கங்கனா கூறியுள்ளார்.