ரசிகரின் உச்சகட்ட பாச வெறி.! ப்ளீஸ்.. இப்படி யாரும் செய்யாதீங்க!! செம ஷாக்கான ஹரிஷ் கல்யாண்!

ரசிகரின் உச்சகட்ட பாச வெறி.! ப்ளீஸ்.. இப்படி யாரும் செய்யாதீங்க!! செம ஷாக்கான ஹரிஷ் கல்யாண்!


harish-kalyan-request-to-fans

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். ஆனால் அப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 
மேலும் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகளும் குவிந்தது. 

அதனை தொடர்ந்து அவர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெண்களின் மனதை கொள்ளை கொண்டு காதல் மன்னனாக வலம் வருகிறார். அதனை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

இவ்வாறு பல வருட போராட்டத்திற்கு பிறகு வெற்றி நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்நிலையில் தீவிர ரசிகர் ஒருவர் கையில் ஹரிஷ் கல்யாணின் பெயரை பச்சை குத்தி அதை  ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இனிமேல்  தயவு செய்து யாரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.